Courtesy: Sivaa Mayuri
இலங்கையின் மத்திய வங்கி, 2024 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் இந்திய (India) மத்திய வங்கிக்கு 225 மில்லியன் அமெரிக்க டொலர்களை திருப்பிச் செலுத்தியுள்ளதாக உத்தியோகபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி, இதுவரை இரண்டு தவணைகளாக இலங்கை மத்திய வங்கி, இந்திய மத்திய வங்கிக்கு 375 டொலர்களை திருப்பி செலுத்தியுள்ளது.
2023ஆம் ஆண்டு ஒக்டோபரில், இந்திய மத்திய வங்கியிடமிருந்து இலங்கையின் மத்திய வங்கி 2,601.43 மில்லியன் டொலர் கடனை பெற இலங்கையின் திறைசேரி உத்தரவாதத்தை வழங்கியிருந்தது.
பெறப்பட்ட கடன் தொகை
இந்தநிலையில், உத்தியோகபூர்வ தரவுகளின்படி, இந்திய மத்திய வங்கிக்கு செலுத்த வேண்டிய கடன் கடந்த டிசம்பர் மாதத்தில் 2,451.43 மில்லியன் டொலர்களாக இருந்தது.
இதற்கமைய, கடன் தொகை 2024ஆம் ஆண்டு மார்ச் மாத இறுதிக்குள் 2,226.43 மில்லியன் அமெரிக்க டொலர்களாகக் குறைந்துள்ளது.