Home இலங்கை சமூகம் கண்டியில் தொடருந்துடன் மோதி இளைஞன் உயிரிழப்பு

கண்டியில் தொடருந்துடன் மோதி இளைஞன் உயிரிழப்பு

0

கண்டி (Kandy) – கடுகண்ணாவை காவல்துறை பிரிவுக்குட்பட்ட பகுதியில் தொடருந்துடன் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கடுகண்ணாவை – பிலிமத்தலாவை தொடருந்து நிலையங்களுக்கு இடையில் உள்ள தொடருந்து மார்க்கத்தில் நேற்று (21) குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதன்போது கடுகண்ணாவை பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞன் ஒருவரே உயிரிழந்துள்ளார்.

காவல்துறையினர் விசாரணை

உயிரிழந்தவரது சடலம் பேராதனை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கடுகண்ணாவை காவல்தறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

NO COMMENTS

Exit mobile version