தமிழ் கட்சிகள் மற்றும் தலைமைகளின் தவறினால் தமிழ் மக்கள் சிங்கள கட்சிகளை நோக்கி நகர்வது பேராபத்திற்கு வழிவகுத்துள்ளதாக யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர் மாணிக்கவாசகர் இளம்பிறையன் தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தை லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “தமிழ் கட்சிகளில் இருக்கும் ஒரு சிலரை பழிவாங்குவதற்காக தென்னிலங்கை கட்சிகளை ஆதரிப்பது என்பது ஒரு பிழையான செயற்பாடாகும்.
தேசிய மக்கள் மக்கள் சக்தியின் அலையுடன் தமிழ் மக்கள் சேர்ந்து அடித்து செல்லப்படுவது என்பது தமிழ் இனத்தின் மிகப்பெரிய சாபக்கேடாகும்” என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், நடைபெறவுள்ள உள்ளுராட்சி தேர்தல், தமிழ் தலைமைகள் இழைத்த தவறு, தேசிய மக்கள் சக்தி தமிழ் மக்களுக்காக முன்னெடுத்துள்ள நடவடிக்கை, தமிழ் மக்கள் தேசிய மக்கள் சக்தியை நோக்கி நகர்வதனால் ஏற்படபோகும் ஆபத்து மற்றும் பலதரப்பட்ட அரிசயல் விடயங்கள் தொடர்பில் அவர் தெரிவித்துள்ள கருத்துக்களுடன் வருகின்றது இன்றைய ஊடறுப்பு,
https://www.youtube.com/embed/C67S5ob5goE
