Home இலங்கை சமூகம் மாணிக்க கங்கையில் நீராடச் சென்றவருக்கு நேர்ந்த கதி: பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

மாணிக்க கங்கையில் நீராடச் சென்றவருக்கு நேர்ந்த கதி: பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

0

கதிர்காமம் (Kataragama) காவல்துறை பிரிவிற்குட்பட்ட மாணிக்க கங்கையில் நீராடிக் கொண்டிருந்த நபர் ஒருவர் முதலைக்கு இரையாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவம் நேற்றைய (06) தினம் காலை மாணிக்க கங்கையின் பாலத்திற்கு அருகாமையில் இடம்பெற்றுள்ளது.

காவல்துறை விசாரணை

முதலைக்கு இரையான நபரின் சடலம் காவல்துறையினர் மற்றும் வனஜீவிகள் பாதுகாப்பு அதிகாரிகள் ஆகியோரின் ஒத்துழைப்புடன் மீட்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த நபரின் ஆள் அடையாள விபரங்கள் இதுவரையில் வெளியிடப்படவில்லை.

சுமார் 30 முதல் 35 வயது வரையிலான நபர் ஒருவரே இவ்வாறு முதலைக்கு இரையாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், மாணிக்க கங்கையில் நீராடும் போது அவதானத்துடன் இருக்குமாறு பொது மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். 

Source: https://ibctamil.com/article/the-fate-of-manika-who-went-to-bathe-in-the-ganges-1720330185

NO COMMENTS

Exit mobile version