ரஷ்யாவைச் சேர்ந்த சமூக வலைத்தள பதிவருக்கு சொந்த குழந்தையைப் பசியால் வருத்தி உயிரிழக்கச் செய்த குற்றத்திற்காக ரஷ்ய நீதிமன்றம் 8 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
44 வயதான மாக்ஸிம் லியுட்டி (Maxim Lyutyi) என்ற குறித்த நபர் காய்கறிகளை மட்டும் எடுத்துக் கொள்ளும் உணவுப் பழக்கத்தைப் பின்பற்றுபவர்.
இவரது ஒரு வயதுக்கும் குறைவான குழந்தைக்கு நீர், உணவு கொடுக்கமால் சூரிய ஒளி மூலம் மட்டுமே உணவு எடுத்துக் கொள்ள செய்ததில் குழந்தை உயிரிழந்துள்ளது.
பதிலடி நடத்தினால் விளைவு பயங்கரமாக இருக்கும் : இஸ்ரேலை எச்சரிக்கும் ஈரான்
மனைவிக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை
கடந்த வாரம் மாக்ஸிம் நீதிமன்றத்தில் தன் தவறை ஒத்துக்கொண்டுள்ளார். அதற்கு முன்பு வரை தனது மனைவி ஓக்சானா மிரோனோவா (34) மீது பழி சுமத்தி வந்துள்ளார்.
இந்த நிலையில் அவரது மனைவிக்கும் பிணையில் வெளிவரா இயலாத 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
மாக்ஸிம் குழந்தைக்குத் தாய்ப் பால் புகட்டுவதில் இருந்து கூட மிரோனோவாவைக் கட்டுப்படுத்தியுள்ளார் எனக் கூறப்பட்டுள்ளது.
இந்தியாவின் சனத்தொகை எவ்வளவு தெரியுமா : ஐ.நா வெளியிட்ட அறிவிப்பு
குழந்தை மூலம் பரிசோதித்து
சூரிய ஒளி மூலம் மட்டுமே உணவு பெறும் சோதனையைத் தன் குழந்தை மூலம் பரிசோதித்து பார்த்ததுடன் பரிசோதனை முடிவுகளை வைத்து மற்றவர்களுக்கு இந்த உணவுப் பழக்கத்தைச் சொல்லிக் கொடுக்கவிருந்தார்.
இதேவேளை மாக்ஸிம் ஒரு குழுவை நடத்தி வந்ததாகவும் அதிலிருந்து தன் மகளைத் தனித்திருக்க தான் கோரியதாகவும் மிரோனோவாவின் தாயார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
துருக்கி செல்கிறார் ஹமாஸ் தலைவர்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள். |