Home இலங்கை சமூகம் மரக்கறிகளின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

மரக்கறிகளின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

0

நாட்டில் மரக்கறிகளின் விலை சற்று வீழ்ச்சியை பதிவு செய்துள்ளன.

பேலியகொடை மெனிங் சந்தையின் நேற்றைய நிலவரப்படி, ஒரு கிலோகிராம் கத்தரிக்காய் 150 ரூபாவுக்கும், ஒரு கிலோகிராம் லீக்ஸ் 250 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

விலையில் மாற்றம்

அத்துடன் ஒரு கிலோகிராம் கரட் 150 ரூபாவாகவும், ஒரு கிலோகிராம் போஞ்சி 250 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

கடந்த காலங்களில் நாட்டின் பல பகுதிகளில் பெய்த கடும் மழை காரணமாக நாடளாவிய ரீதியில் மரக்கறிகளின் விலை திடீரென அதிகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.   

Source: https://tamilwin.com/article/the-price-of-vegetables-fell-slightly-1720318563

NO COMMENTS

Exit mobile version