Home இலங்கை அரசியல் தமிழ் மக்களை மடையர்களாக்கும் அநுர அரசு : சாணக்கியன் சீற்றம்

தமிழ் மக்களை மடையர்களாக்கும் அநுர அரசு : சாணக்கியன் சீற்றம்

0

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தமிழ் மக்களை மடையர்களாக இருப்பார்கள் என்கின்ற எண்ணத்துடன் செயற்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் (Shanakiyan Rasamanickam) தெரிவித்துள்ளார்.

மன்னாரில் (Mannar) நேற்று (26.04.2025) இடம்பெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தல் கூட்டத்தின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் உரையாற்றுகையில், ‘இலங்கை தமிழரசுக் கட்சிக்கு வடக்கு கிழக்கில் கடந்த பாராளுமன்ற தேர்தலில்
கிடைக்கப் பெற்ற வாக்குகளை விட இம்முறை இடம்பெற உள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலில் அதிகளவான வாக்குகள் கிடைத்தால் மட்டுமே நாங்கள் நாடாளுமன்றத்திலே தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து பேசுகின்ற போது எமது உரைகளுக்கான அங்கீகாரம் கிடைக்கும்.

அரசியல் தீர்வு

இந்த நாட்டிலே அரசியல் தீர்வு என்பது ஒரு முக்கியமான விடையம். நிறந்தரமான அரசியல் தீர்வு என்பது சமஸ்டி முறையில் கிடைக்க வேண்டும் என்பதை எமது கட்சியின் பொதுச் செயலாளர் கூறியிருந்தார்.

இந்த நாட்டிலே எமது மக்களுக்கு நிரந்தரமான அரசியல் தீர்வு இல்லாது விட்டால் இந்த நாட்டிலே எமக்கு நிரந்தரமாக வாழ்வு இல்லை என்பதையும் அவர் கூறியிருந்தார்.

ந்த நாட்டிலே தமிழ் மக்களுக்கு நிறந்தரமான ஒரு அரசியல் தீர்வு வேண்டும் என தமிழ் மக்கள் சொல்வதை நாங்கள் மீண்டும் ஒரு முறை எடுத்துச் சொல்வதற்கு இந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலை நாங்கள் சரியான முறையில் பயன்படுத்த வேண்டும்.

நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளை வைத்துக் கொண்டு இன்று தென்னிலங்கையிலே என்.பி.பி அரசாங்கம் கூறிக்கொண்டு வருகின்ற விஷயம் இலங்கை தமிழரசுக் கட்சியை குறி வைத்து கூறுகிறார்கள். இக்கட்சியை வடக்கு கிழக்கு மக்கள் நிராகரித்து விட்டார்கள் என்று.

மேலும் தமிழ் மக்கள் மடையர்களாக இருப்பார்கள் என்ற எண்ணம் இருக்கலாம்.அதை மாற்றி அமைப்பதற்கான ஒரு தேர்தலாக இத்தேர்தல் அமைய வேண்டும். என அவர் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்த விடயங்களை கீழ் உள்ள இணைப்பில் காண்க…

https://www.youtube.com/embed/5oCfz1gOwKk

NO COMMENTS

Exit mobile version