Home இலங்கை குற்றம் நான்கு வயது குழந்தையுடன் நீர்த்தேக்கத்தில் குதித்த பெண்

நான்கு வயது குழந்தையுடன் நீர்த்தேக்கத்தில் குதித்த பெண்

0

தலவாக்கலைப் பிரதேசத்தில் நான்கு வயதுக் குழந்தையொன்றுடன் பெண்ணொருவர் உயிரை மாய்த்துக் கொள்ள முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று (16) மாலை, 40 வயதுடைய தாயொருவர் தனது நான்கு வயதுக்குழந்தையுடன் , தலவாக்கலை – மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் குதித்துள்ளார்.

தேடுதல் நடவடிக்கை

அதனைக் கண்ட பொதுமக்கள் பொலிசாருக்குத் தகவல் வழங்கியுள்ளதுடன், பொலிஸார் மற்றும் பொதுமக்கள் இணைந்து மேற்கொண்ட மீட்பு நடவடிக்கையில் தாய் காப்பாற்றப்பட்டுள்ளார்.

பின்னர் அவர் பொலிசாரினால் அழைத்துச்செல்லப்பட்டு, லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

எனினும் அவரது நான்கு வயதுக்குழந்தை நீரில் மூழ்கி காணாமல் போயுள்ள நிலையில் குழந்தையை தேடும் பணியில் பொலிஸாரும் பொது மக்களும் நேற்று மாலை வரை ஈடுபட்டிருந்தனர்.  

NO COMMENTS

Exit mobile version