Home இலங்கை சமூகம் நெடுநாள் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்ட இரு சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல் உத்தரவு

நெடுநாள் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்ட இரு சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல் உத்தரவு

0

நுவரெலியா – லபுக்கலை கொண்டக்கலை பகுதியைச் சேர்ந்த
இருவர் ஏராளமான இடங்களில் பணம் , நகை உட்பட பெருமளவிலான இலத்திரனியல்
உபகரணங்களையும் கொள்ளையிட்ட சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த திருட்டில் ஈடுபட்ட சந்தேகநபர்களை பொலிஸார் நேற்று (14) கைது செய்திருந்த நிலையில், நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

இந்நிலையில், கைது செய்யப்பட்ட இருவரில் ஒருவர் 43 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தை எனவும் இவரின்
மனைவி வெளிநாட்டில் பணிபுரிந்து வருவதாகவும் மற்றொருவர் 29 வயதுடையவர் எனவும் அவர் பல திருட்டு சம்பவங்களில் தொடர்புடையவர் என்றும் பொலிஸார் கூறியுள்ளனர்.

நீதிமன்றத்தினால் பிடியாணை 

இந்நிலையில் 29 வயதுடைய சந்தேகநபர் தொடர்பில் வலப்பனை நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டு பொலிஸாரால்
தேடப்பட்டு வந்தவர் எனவும் பல முறை விளக்கமறியலில் வைக்கப்பட்டவர் என தெரிவிக்கப்படகிறது.

இறுதியில் ஓகஸ்ட் (13) திகதி இரவு நுவரெலியா லபுக்கலை – குடாஒயா பகுதியில் உள்ள
வீடொன்றில் யன்னலை உடைத்து உள்நுழைந்த இவ்விரு திருடர்களும் வீட்டில்
பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த பணப்பையில் இருந்த 20 ஆயிரம் ரூபாய் பணத்தை
திருடிச் சென்றதை ஒப்புக் கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

எனினும் நுவரெலியா தலைமையக பொலிஸார் இரு திருடர்கள் வீட்டிலிருந்து திருடப்பட்
அதிகமான இலத்திரனியல் உபகரணங்கள் மற்றும் பல பொருடகளை கைப்பற்றியுள்ளதாகவும்
இவற்றின் 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான திருட்டுப் பொருட்கள் அடங்குவதாகவும் கூறியுள்ளனர்.

மேலும் குறித்த சந்தேகநபர்கள் இருவரையும் இன்று (15) நுவரெலியா மாவட்ட
நீதவான் நீதிமன்றத்தில்முன்னிலைப்படுத்தியப்போது.  14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு பதில்
நீதவான் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version