Home இலங்கை அரசியல் மலையக மக்களுக்கு காணியை வழங்குமாறு திகாம்பரம் எம்.பி கோரிக்கை

மலையக மக்களுக்கு காணியை வழங்குமாறு திகாம்பரம் எம்.பி கோரிக்கை

0

மலையக தமிழ் மக்கள் மீது தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு உண்மையான அக்கறை இருந்தால் 10 பேர்ச்சஸ் காணியை உடன் வழங்க வேண்டும் என நாடாளுமன்ற பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.

ஹட்டனில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் பின் ஊடகங்களுக்கு கருத்து
தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

“அனைத்து உள்ளுராட்சி சபைகளையும் கைப்பற்றுவதற்கு அரசாங்கம் முயற்சிக்கின்றது.
ஆனால் எதிரணியில் இருந்தபோது தாம் செய்வதாகக் கூறிய விடயங்களை ஆட்சிக்கு வந்த
பிறகு தேசிய மக்கள் சக்தி செய்யவில்லை.

திட்டங்களுக்கு ஆதரவு

வழங்கப்பட்ட வாக்குறுதிகளும்
நிறைவேற்றப்படவில்லை.

மலையகத் தமிழர்கள் மற்றும் தோட்டத் தொழிலாளர்கள் மீது இந்த அரசாங்கத்துக்கு
உண்மையாகவே கரிசணை இருக்குமானால் உடனடியாக 10 பேர்ச்சஸ் காணியை வழங்க
வேண்டும். அதனை வழங்குவதற்கு ஆட்சியாளர்கள் தயாரில்லை.

தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரத்து 700 ரூபா வழங்கப்படும் என 6 மாதங்களாக
கூறிவருகின்றனர். ஆனால், எதுவும் நடப்பதாக தெரியவில்லை. ஆனாலும் மலையக
மக்களுக்காக அரசாங்கம் முன்னெடுக்கும் திட்டங்களுக்கு ஆதரவு வழங்குவோம்”  எனத் தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version