Home இலங்கை அரசியல் இந்த அரசாங்கம் 20 ஆண்டுகள் ஆட்சி செய்யும்

இந்த அரசாங்கம் 20 ஆண்டுகள் ஆட்சி செய்யும்

0

 ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் 20 ஆண்டுகளுக்கு ஆட்சி நடத்தும் என கடுவல நகர பிதா ரஞ்சன் ஜயலால் தெரிவித்துள்ளார்.

தற்போதயை அரசாங்கத்தை ஆட்சி கவிழ்க்க முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போதைய அரசாங்கத்தின் ஆட்சியில் ஊழல், மோசடிகள் மற்றும் களவுகள் இடம்பெறுவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயம் மக்களுக்கு நன்கு தெரியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனவே மின்சாரம் மற்றும் எரிபொருள் கட்டணங்கள் சிறிதளவில் அதிகரித்தாலும் மக்கள் அதனை மகிழ்ச்சியுடன் தாங்கிக் கொள்வதாகத் தெரிவித்துள்ளார்.

சிங்கள தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். 

NO COMMENTS

Exit mobile version