Home முக்கியச் செய்திகள் இலங்கையில் இன்று இடம்பெற்ற கோர விபத்து: ஸ்தலத்தில் ஏழு பேர் பலி!

இலங்கையில் இன்று இடம்பெற்ற கோர விபத்து: ஸ்தலத்தில் ஏழு பேர் பலி!

0

தியதலாவ பகுதியில் பாரிய விபத்தொன்றில் ஏழு பேர் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த விபத்தானது இன்று (21) சற்று முன்னர் இடம்பெறுள்ளது.

மேலும் இந்த விபத்தில் மேலும் 18 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காரோட்ட பந்தயம்

குறித்த பகுதியில் இடம்பெற்ற காரோட்ட பந்தய போட்டியின் (Fox Hill Super Cross – 2024 ) போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

போட்டியில் பங்குபற்றிய பந்தய கார் ஒன்று பந்தய பாதையை விட்டு விலகி பார்வையாளர்கள் மீது மோதிக் கொண்டதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

வைத்தியசாலையில் அனுமதி

இதேவேளை விபத்தில் படுகாயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Source: https://ibctamil.com/article/thiyathalawa-accident-today-1713696270?itm_source=parsely-popular

NO COMMENTS

Exit mobile version