Home இலங்கை குற்றம் ஏழு மாதங்களில் இலஞ்சம் வாங்கியவர்களின் எண்ணிக்கை வெளியானது

ஏழு மாதங்களில் இலஞ்சம் வாங்கியவர்களின் எண்ணிக்கை வெளியானது

0

2025ஆம் ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் இலஞ்சம் தொடர்பான முறைப்பாடுகள் தொடர்பாக
மொத்தம் 49 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக இலஞ்சம் அல்லது ஊழல்
குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையகம் தெரிவித்துள்ளது.

இந்த காலகட்டத்தில் மொத்தம் 3,937 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக ஆணையகம்
தெரிவித்துள்ளது.

 அதிக எண்ணிக்கையிலான பொலிஸ் அதிகாரிகள் 

இந்த முறைப்பாடுகளின்  அடிப்படையில், 72 சோதனைகள் நடத்தப்பட்டன, அவற்றில் 39
வெற்றியளித்துள்ளதாக ஆணையகம் குறிப்பிட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர்களில், அதிக எண்ணிக்கையிலானவர்கள் பொலிஸ் அதிகாரிகள்
என்பது தெரியவந்துள்ளது.  இதன்படி 17 பொலிஸ் அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர்.

   

அத்துடன், நீதி அமைச்சகம், சுகாதார அமைச்சகம், குடிவரவு மற்றும் குடியகல்வுத்
திணைக்களம், இலங்கை போக்குவரத்து சபை மற்றும் மாவட்ட செயலகங்கள் உட்பட பல அரசு
நிறுவனங்களிலிருந்தும் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக ஆணையகம் மேலும்
குறிப்பிட்டது.

அத்துடன், இந்தக் காலகட்டத்தில்,  இலஞ்சம் பெற்றதற்காக 27 பேர் நீதிமன்றங்களால்
தண்டிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version