கடந்த அரசாங்கத்தின் ஆட்சியின் போது ஆயிரக்கணக்கான அரச வாகனங்கள் காணாமல் போயுள்ளதாக கணக்காய்வாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
அவ்வாறு காணாமல் போன வாகனங்கள் தொடர்பில் முழுமையான அறிக்கை தயாரிக்கப்படும் என கணக்காய்வாளர் நாயகம் டபிள்யூ.பி.சி. விக்ரமரத்ன தெரிவித்தார்.
புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததையடுத்து, அமைச்சுக்களின் முன்னாள் செயலாளர்கள் மற்றும் ஜனாதிபதியின் ஆலோசகர்கள் பயன்படுத்திய பல உத்தியோகபூர்வ வாகனங்கள் அண்மையில் காலி முகத்திடலில் நிறுத்தப்பட்டிருந்தன.
அரச வாகனங்கள்
எனினும் சுகாதாரம், கல்வி, தபால், நீர்ப்பாசனம், ஜனாதிபதி செயலகம் உள்ளிட்ட பல அரச நிறுவனங்களுக்குச் சொந்தமான ஆயிரக்கணக்கான வாகனங்கள் கடந்த காலங்களில் காணாமல் போயுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சுகாதார அமைச்சுக்கு சொந்தமான வாகனங்களே அதிகளில் காணாமல் போயுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தீவிர விசாரணை
மோசடி தொடர்பில் மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் திணைக்களத்துடன் இணைந்து கணக்காய்வாளர் அலுவலகம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக, அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான அறிக்கை விரைவில் முழுமையாக வெளிபிடப்படும் என கணக்காய்வாளர் நாயகம் டபிள்யூ.பி.சி. விக்ரமரத்ன மேலும் தெரிவித்தார்.