Home இலங்கை சமூகம் மஸ்கெலியாவில் 150 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்கான டிப்பர் வாகனம்

மஸ்கெலியாவில் 150 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்கான டிப்பர் வாகனம்

0

நுவரெலியா – மஸ்கெலியாவில் டிப்பர் ரக வாகனமொன்று வீதியை விட்டு விலகி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் சாரதி மற்றும் உதவியாளர் படுகாயமடைந்துள்ளனர்.

மஸ்கெலியாவில் இருந்து ஹங்குராங்கெத்த பகுதியை நோக்கி சென்ற டிப்பர் வாகனமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த விபத்தானது நோர்டன்பிரிட்ஜ் கினிகத்தேன பிரதான வீதியின் தப்லோ ஹுலாங்
வளைவு பகுதியில் இடம்பெற்றுள்ளது.

சுமார் 150 அடி பள்ளம்

சுமார் 150 அடி பள்ளத்தில் விழ்ந்ததில் டிப்பர் வாகனத்தின்
சாரதியும், உதவியாளரும் படுகாயமடைந்து நாவலப்பிட்டி ஆதார வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டுள்ளதாக நோர்டன்பிரிட்ஜ் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சாரதியின் கவனமின்மை காரணமாக இவ்விபத்து நேர்ந்துள்ளதாகவும், குறித்த டிப்பர்
ரக வாகனம் பலத்த சேதமடைந்துள்ளதாகவும் விபத்து தொடர்பில் விசாரணைகளை
மேற்கொண்டு வரும் நோர்டன்பிரிட்ஜ் பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version