Home இலங்கை அரசியல் வெளிநாட்டுக்கு தப்பியோட தயாராக இருக்கும் தென்னிலங்கை அமைச்சர்

வெளிநாட்டுக்கு தப்பியோட தயாராக இருக்கும் தென்னிலங்கை அமைச்சர்

0

நாட்டை விட்டு அதிகளவான அரசியல்வாதிகள் தப்பிச் செல்லவுள்ளதாக வெளியான தகவலை பொது பாதுகாப்பு அமைச்சர் டிரன் அலஸ் மறுத்துள்ளார்.

தேர்தல் பிரசாரங்கள் சூடு பிடித்துள்ள நிலையில், அந்த மேடைகளில் தெரிவிக்கப்பட்ட அடிப்படையற்ற தகவலாக இது உள்ளதென அவர் குறிப்பிட்டுள்ளார்.

தான் எந்தவொரு நாட்டுக்கு சென்றாலும் பத்து வருடங்கள் வாழக் கூடிய விசா தன்வசம் உள்ளது. நாட்டை விட்டு வெளியேறுவதற்கு விசா பெற வேண்டிய அவசியமில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அரசியல்வாதிகள் வெளியேற திட்டம்

கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு விஜயம் செய்திருந்த போது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போது அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் 80 அரசியல்வாதிகள் நாட்டை விட்டு வெளியேற விசா பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

கடந்த ஆட்சியின் போது ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர்களான சஜித் பிரேமதாஸ, அனுரகுமார திசாநாயக்க ஆகியோர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

NO COMMENTS

Exit mobile version