Home இலங்கை அரசியல் ஜனாதிபதியுடன் தமிழரசுக்கட்சியினர் விசேட சந்திப்பு

ஜனாதிபதியுடன் தமிழரசுக்கட்சியினர் விசேட சந்திப்பு

0

Courtesy: Sivaa Mayuri

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சிசியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த சந்திப்பானது,  இன்று(04.12.2024) ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.

வடக்கு மற்றும் கிழக்கு பிராந்தியம்

இந்த சந்திப்பின்போது, வடக்கு மற்றும் கிழக்கு பிராந்தியங்களில் உள்ள மக்கள் நீண்டகாலமாக எதிர்நோக்கும் சவால்கள் குறித்து, கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு சென்றதாக கூறப்படுகிறது.

இந்த சந்திப்பில், நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன், பத்மநாதன் சத்தியலிங்கம், சண்முகம் குகதாசன், சானக்கியன் இராசமாணிக்கம், ஞானமுத்து ஸ்ரீநேசன், கவீந்திரன் கோடீஸ்வரன், இளையதம்பி ஸ்ரீநாத், துரைராசா ரவிகரன் ஆகியோர் கலந்துகொண்டமையும் குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version