Home இலங்கை அரசியல் தமிழ் தேசிய பேரவைக்கும் ஜனநாயக தமிழ் கூட்டணிக்குமான ஒப்பந்தம்! திட்டமிட்டு நடத்தப்படும் சதி

தமிழ் தேசிய பேரவைக்கும் ஜனநாயக தமிழ் கூட்டணிக்குமான ஒப்பந்தம்! திட்டமிட்டு நடத்தப்படும் சதி

0

தமிழ் தேசிய பேரவைக்கும் ஜனநாயக தமிழ் கூட்டணிக்குமான ஒப்பந்தத்தை தொடர்ந்து கூட்டணி சார்பில் சித்தார்த்தன் மற்றும் சுரேஸ் பிரேமசந்திரன் ஆகியோர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து ஆதரவு கோரவுள்ளதாக வெளியானசெய்திகள் உண்மைக்கு புறம்பானவை என்று நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

இன்றையதினம்(6) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

“தமிழ் தேசிய பேரவைக்கும் ஜனநாயக தமிழ் கூட்டணிக்குமிடையில் இடம்பெற்ற புரிந்துணர்வு ஒப்பந்தத்தை கொச்சைப்படுத்துவதற்காக திட்டமிட்ட வெளியான பொய்யான செய்தியே இது.

இவ்வாறான பொய் செய்திகளை நிராகரிப்பதோடு அதனை கண்டிக்கின்றோம்.

தமிழரசுக்கட்சியும் ஈ.பி.டி.பின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்துள்ள நிலையில் அதனை நியாயப்படுத்துவதாகவே இந்த செய்திகள் வெளியாகியுள்ளன” என குறிப்பிட்டுள்ளார்.

முழுமையான தகவல்களுக்கு….

NO COMMENTS

Exit mobile version