Home முக்கியச் செய்திகள் வளிமண்டலத் தளம்பல் நிலை: பலத்த இடியுடன் கூடிய மழை பெய்யும் வாய்ப்பு

வளிமண்டலத் தளம்பல் நிலை: பலத்த இடியுடன் கூடிய மழை பெய்யும் வாய்ப்பு

0

இலங்கையைச் சூழவுள்ள பகுதிகளில் ஏற்பட்ட கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை காரணமாக நாடு முழுவதும் தற்போது நிலவும் மழை நிலைமை மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) இன்று (14.08.2024) வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளது.

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இந்தப் பிரதேசங்களில் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவு பகுதிகளிலும் வடமேற்கு மாகாணத்தின் அம்பாறை, மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது கி.மீ. (30-40) வரை பலத்த காற்று வீசக்கூடும்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கை

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.

மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.   

Source: https://ibctamil.com/article/today-50mm-heavy-rain-weather-tamil-1723599731?itm_source=parsely-popular

NO COMMENTS

Exit mobile version