Home இலங்கை பொருளாதாரம் வருட ஆரம்பத்தில் உயர்வடைந்த டொலரின் பெறுமதி

வருட ஆரம்பத்தில் உயர்வடைந்த டொலரின் பெறுமதி

0

இலங்கை மத்திய வங்கி (CBSL) இன்றைய நாளுக்கான (01.01.2025) நாணய மாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது.

அதன்படி, வருட ஆரம்ப நாளான இன்று டொலரின் பெறுமதி சற்று உயர்வடைந்துள்ளது.

இந்நிலையில், அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 289.08 ரூபாவாகவும் விற்பனைப் பெறுமதி 297.65 ரூபாவாகவும் அதிகரித்துள்ளது.

கொள்முதல் மற்றும் விற்பனைப் பெறுமதி

இதேவேளை, யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 297.53 ரூபாவாகவும் விற்பனைப் பெறுமதி 310.18 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 199.43 ரூபாவாகவும் விற்பனைப் பெறுமதி 208.42 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 176.94 ரூபாவாகவும் விற்பனைப் பெறுமதி 186.31 ரூபாவாகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version