Home இலங்கை சமூகம் மக்களே அவதானம்! காலநிலை மாற்றம் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

மக்களே அவதானம்! காலநிலை மாற்றம் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

0

நாட்டில் தற்போது நிலவும் கடுமையான வெப்பம் மற்றும் அவ்வப்போது பெய்யும் மழை, மக்களின் உடல்நலத்திற்கு பாதகமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என பொது சுகாதார பரிசோதகர் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் ,மக்கள் இது குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,  இந்த நாட்களில் தீவின் சில பகுதிகளில் நிலவும் கடுமையான வெப்பம் மற்றும் கடுமையான சூரிய ஒளி காரணமாக தோல் நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால், மக்கள் நீண்ட நேரம் சூரிய ஒளியில் இருப்பதைத் தவிர்க்க வேண்டும்.

அறிவுறுத்தல்

குறிப்பாக வெளியில் வேலை செய்பவர்கள் மற்றும் விளையாடுபவர்கள் இதில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

சூரிய ஒளியில் நீண்ட நேரம் வெளிப்படுவது நீரிழப்புக்கு வழிவகுக்கும் என்பதால், போதுமான அளவு சுத்தமான தண்ணீர் அல்லது ஏதாவது ஒரு திரவத்தை குடிப்பது முக்கியம்.

அத்தோடு, இந்த நாட்களில் சில பகுதிகளில் அவ்வப்போது பெய்யும் மழை ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல.

மேலும் டெங்கு மற்றும் சிக்குன்குனியா நோய்கள் பரவுவதற்கு இது ஒரு காரணமாக அடையாளம் காணப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version