Home சினிமா கங்குவா படத்தில் கேமியோ ரோலில் நடிக்கும் முன்னணி ஹீரோ.. யார் தெரியுமா

கங்குவா படத்தில் கேமியோ ரோலில் நடிக்கும் முன்னணி ஹீரோ.. யார் தெரியுமா

0

கங்குவா

சிறுத்தை சிவா இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் கங்குவா. இப்படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கிறது. தேவி ஸ்ரீ பிரசாத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இப்படத்தில் வில்லனாக பாலிவுட் நடிகர் பாபி தியோல் நடிக்கிறார். இவர் கடந்த ஆண்டு வெளிவந்த அனிமல் படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து மிரட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் திஷா பாட்னி இப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

இதுவரை இப்படத்திலிருந்து வெளிவந்த டீசர் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் நாளை சூர்யாவின் பிறந்தநாள் என்பதால் படத்தின் முதல் பாடலை படக்குழு வெளியிடவுள்ளனர். இதனை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துகொண்டு இருக்கிறார்கள்.

கேமியோ ரோலில் இவரா

இந்த நிலையில், கங்குவா திரைப்படத்தில் கேமியோ ரோலில், முன்னணி நடிகரும், சூர்யாவின் தம்பியான கார்த்தி நடிக்கவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இது எந்த அளவிற்கு உண்மை என்றும் தெரியவில்லை.

விக்ரம் படத்தில் சூர்யாவின் கேமியோ ரோல் போல் கங்குவா படத்தில் கார்த்தியின் கேமியோ அமையுமா என பொறுத்திருந்து பார்ப்போம். அப்படி அமைந்தால் கண்டிப்பாக கங்குவா படத்திற்கு கூடுதல் வரவேற்பு கிடைக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

Source: https://cineulagam.com/article/top-actor-doing-cameo-role-in-kanguva-1721622968

NO COMMENTS

Exit mobile version