டூரிஸ்ட் ஃபேமிலி
சமீபத்தில் வெளிவந்து தமிழ் சினிமாவில் மாபெரும் வெற்றியை பதிவு செய்துள்ள திரைப்படம் டூரிஸ்ட் ஃபேமிலி. சசிகுமார், சிம்ரன் நடிப்பில் உருவான இப்படத்தை அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கியிருந்தார்.
குட் நைட், லவ்வர் போன்ற படங்களை தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் இப்படத்தை தயாரித்து இருந்தனர். மேலும் இப்படத்தில் எம்.எஸ். பாஸ்கர், இளங்கோ குமரவேல், ரமேஷ் திலக் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
நேற்று இப்படத்தின் வெற்றியை பத்திரிக்கையாளர்களுடன் இணைந்து படக்குழு கொண்டாடினார்கள். மக்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்றுள்ள இப்படம் முதல் நாளில் இருந்தே வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது.
பிரபாஸ் உடன் நடிக்க தீபிகா படுகோன் வாங்கும் சம்பளம்.. நயன்தாராவை இத்தனை மடங்கா
வசூல்
இந்த நிலையில், இதுவரை உலகளவில் டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் ரூ. 54 கோடி வசூல் செய்துள்ளது. இதன்மூலம் மிகப்பெரிய லாபத்தை கிடைத்துள்ளது என தகவல் தெரிவிக்கின்றனர்.
