திருகோணமலை மாவட்டத்தில் மொத்தமாக 68% ஆன வாக்களிப்பு இடம்பெற்றுள்ளது.
உள்ளூர் அதிகார சபைகள் தேர்தலுக்கான வாக்களிப்பானது நாடளாவிய ரீதியில் இன்று
(06) காலை 7.00 மணி முதல் ஆரம்பமாகியுள்ளது.
திருகோணமலை மாவட்டத்தில்
வாக்காளர்கள் காலை 7.00 மணி தொடக்கம் மாலை 4.00 மணி வரை மிகவும் சுதந்திரமான
முறையில் வாக்களிப்பு நடைபெற்றது.
திருகோணமலை மாவட்டத்தில் மொத்தமாக 68% ஆன வாக்களிப்பு இடம்பெற்றிருக்கின்றது
என திருகோணமலை அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான டபிள்யூ.ஜி.எம்.
ஹேமந்த குமார தெரிவித்துள்ளார்.
திருகோணமலை மாவட்டத்தில் 321 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிக்கும்
நடவடிக்கைகள் நிறைவுற்றதை தொடர்ந்து 129 நிலையங்களில் வாக்கெண்ணல்
நடவடிக்கைகள் ஆரம்பமாகவுள்ளதென அவர் தெரிவித்துள்ளார்.
