Home முக்கியச் செய்திகள் மனோ கணேசனின் காலைவாரிய கட்சி உறுப்பினர்கள்!

மனோ கணேசனின் காலைவாரிய கட்சி உறுப்பினர்கள்!

0

தமிழ் முற்போக்கு கூட்டணியின் ஹல்துமுல்ல பிரதேச சபையின் இரண்டு உறுப்பினர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க உள்ளதாக அக்கட்சித் தலைவர் மனோ கணேசன்(Mano Ganesan) தெரிவித்துள்ளார்.

குறித்த இருவரும் தேசிய மக்கள் சக்தியால் தலைவராக பரிந்துரைக்கப்பட்ட நபருக்கு ஆதரவாக வாக்களித்ததற்காகவே இந்த நடவடிக்கையை எடுக்க உள்ளதாக அவர் கூறியுள்ளார்.

குற்றச்சாட்டு

தேசிய மக்கள் சக்தியில் இணையவதற்கு அவர்கள் இருவரும் பண வழங்கப்பட்டுள்ளதாகவும் மனோ கணேசன் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

அத்தோடு, மாற்றத்தை கொண்டு வருவதாக உறுதியளித்த தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது பிறகு பண வெகுமதிகளை வழங்கி பழைய நெறிமுறைகளையே பின்பற்றி வருதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

NO COMMENTS

Exit mobile version