Home இலங்கை அரசியல் அரசியல் பழிவாங்கல் நோக்கில் பொலிஸாருக்கு இடமாற்றம்! சம்பிக ரணவக குற்றச்சாட்டு

அரசியல் பழிவாங்கல் நோக்கில் பொலிஸாருக்கு இடமாற்றம்! சம்பிக ரணவக குற்றச்சாட்டு

0

அரசியல் பழிவாங்கல் நோக்கில் பொலிஸாருக்கு இடமாற்றங்கள் வழங்கப்படுவதாக ஐக்கிய குடியரசு கட்சியின் தலைவர் சம்பிக ரணவக குற்றம் சாட்டியுள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

அங்கு தொடர்ந்தும் கருத்து வௌியிட்ட அவர், கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது தேர்தல் ஆணைக்குழுவின் உத்தரவுக்கு அமைய தேசிய மக்கள் சக்தியின் பிரசாரப் போஸ்டர்களை கிழித்த பொலிஸ் அதிகாரிகள் பலரும் பழிவாங்கும் நோக்கில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இடமாற்றம் 

சுமார் 130க்கும் மேற்பட்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு அவ்வாறான பழிவாங்கல் இடம்பெற்றுள்ளது.

சுயாதீன அமைப்பான தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அதிகாரங்களில் அரசாங்கம் தலையிட்டே இந்த இடமாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதன் பிரகாரம் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் செயற்பாடுகளில் அநீதியான தலையீட்டை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது.

துப்பாக்கிக் கலாசாரம் 

அத்துடன் தங்கள் கட்சிக்கு விசுவாசமான அதிகாரிகளைக் கொண்ட பொலிஸ் திணைக்களத்தை உருவாக்கவும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

தற்போது நாட்டில் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. ஒருபக்கம் பாதாள உலகக்கும்பல் புள்ளிகள் சிவிலியன்கள் உள்ளிட்ட பலரையும் படுகொலை செய்யும் துப்பாக்கிக் கலாசாரம் தலைதூக்கியுள்ளது.

மறுபுறம் பொலிஸ் திணைக்களத்தில் ஏற்பட்டுள்ள அதிகாரப் போட்டி காரணமாக பொலிஸாரின் செயற்பாடுகள் மந்த நிலையை அடைந்துள்ளன என்றும் சம்பிக ரணவக குற்றம் சாட்டியுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version