Home இலங்கை கல்வி உயர்தர பரீட்சை போக்குவரத்து கொடுப்பனவு குறைப்பு : வெடித்தது சர்ச்சை

உயர்தர பரீட்சை போக்குவரத்து கொடுப்பனவு குறைப்பு : வெடித்தது சர்ச்சை

0

தற்போது நடைபெற்று வரும் 2024 உயர்தரப் பரீட்சைகளுக்கான பரீட்சை கடமைகளில் ஈடுபட்டுள்ள உத்தியோகத்தர்களுக்கான போக்குவரத்து கொடுப்பனவுகளை குறைப்பது தொடர்பில் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் வெளியிட்டுள்ள இரண்டு சுற்று நிருபங்கள் தொடர்பில் பிரச்சினை எழுந்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின்(Joseph Stalin) தெரிவித்துள்ளார். 

இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், நவம்பர் முதலாம் திகதி, முதல் சுற்றறிக்கை வெளியிடப்பட்டதாக தெரிவித்தார்.

இந்த சுற்றறிக்கையின்படி பரீட்சை நிலையம் 10 கிலோமீட்டருக்கு மேல் இருந்தால் பரீட்சை மையங்களில் இருந்து பரீட்சை தாள்களைக் கொண்டு செல்ல ரூ. 1,000 ரூபாய் ஒதுக்கப்பட்டது.

இரண்டாவது சுற்றிக்கையில் குறைக்கப்பட்ட கொடுப்பனவு

எனினும், நவம்பர் 8 ஆம் திகதி வெளியிடப்பட்ட மற்றுமொரு சுற்றறிக்கையில், 10 கிலோமீட்டருக்கும் அதிகமான தூரத்திற்கான போக்குவரத்து கொடுப்பனவு ரூ. 500வாக குறைக்கப்ட்டது. 5 முதல் 10 கிலோமீட்டர் தூரத்திற்கு முன்பு ஒதுக்கப்பட்டரூ. 750 ,ரூபா 400 ஆக குறைக்கப்பட்டது. இதேபோல், 2 முதல் 5 கிலோமீட்டர் தூரத்திற்கு ஒதுக்கப்பட்ட ரூ. 500 கொடுப்பனவு ரூ. 300, ஆக குறைக்கப்பட்டது.மற்றும் ரூ. 2 கிலோமீட்டருக்கும் குறைவான தூரங்களுக்கு ஒதுக்கப்பட்ட ரூ 300 கொடுப்பனவு 200 ரூபாயாக குறைக்கப்பட்டது.

புதிய சுற்றறிக்கை மூலம் இந்த போக்குவரத்து கொடுப்பனவுகளை திருத்தம் செய்து குறைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று ஸ்டாலின் கூறினார். இந்த மாற்றம் கடமையாற்றும் பரீட்சை மேற்பார்வையாளர்களுக்கு சிரமங்களை ஏற்படுத்தியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் விளக்கமளிக்க வேண்டும்

இந்த பிரச்சினைக்குரிய நிலைமையை ஏற்படுத்தியமை தொடர்பில் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் விளக்கமளிக்க வேண்டுமென அவர் கோரியுள்ளார்.

உதவித்தொகை உறுதியளித்தால், கூறியபடி வழங்க வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

எனவே, பரீட்சை கடமைகளில் ஈடுபடும் உத்தியோகத்தர்களுக்கு வாக்குறுதியளிக்கப்பட்ட போக்குவரத்து கொடுப்பனவுகள் வழங்கப்படுவதை உறுதி செய்வதற்கு தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு பரீட்சைகள் திணைக்களத்தை இலங்கை ஆசிரியர் சங்கம் கோரியுள்ளது. 

NO COMMENTS

Exit mobile version