Home முக்கியச் செய்திகள் பொது வேட்பாளரை ஆதரிக்கும் திருமலை தமிழரசு கட்சி : செல்வம் அடைக்கலநாதன் வரவேற்பு

பொது வேட்பாளரை ஆதரிக்கும் திருமலை தமிழரசு கட்சி : செல்வம் அடைக்கலநாதன் வரவேற்பு

0

இலங்கை தமிழ் அரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட கிளை,தமிழ் கட்டமைப்பின் சிறந்த முடிவாக பொது வேட்பாளர் அரியநேந்திரனுக்கு ஆதரவளித்து சங்கு சின்னத்தை தீர்மானித்த முடிவு வரவேற்கத்தக்கது என தமிழீழ விடுதலை இயக்கத்தின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன்(seilvam adaikalanathan) தெரிவித்தார்.

திருகோணமலையில் உள்ள இலங்கை தமிழ் அரசு கட்சியின் காரியாலயத்தில் இன்று (31) இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு இவ்வாறு தெரிவித்தார். இதில் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன்(kukathasan) உட்பட கட்சி பிரமுகர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
மேலும் கருத்துரைத்த அவர்,

புரட்சிகரமான முடிவால் மட்டற்ற மகிழ்ச்சி

இந்த புரட்சிகரமான முடிவால் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன் தமிழ் கட்டமைப்பு ஊடாக அனைவரும் ஒற்றுமையாக பயணிக்க வேண்டும் எங்கள் ஒற்றுமையானது தமிழ் கட்டமைப்பு ஒற்றுமையை காட்டியுள்ளது இதனால் தான் 22 உறுப்பினர்களை பெற்றிருக்கிறோம்.

சங்கு சின்னம் ஊடாக அனைத்து தமிழ் கட்சிகளுக்கும் மற்றும் சிவில் அமைப்புக்களுக்கும் ஒரே குடையின் கீழ் ஒன்றிணைத்து மக்களுக்கு பலமான செய்தியை சொல்ல வேண்டும்.

தமிழ் தேசியத்துக்கு பலத்தை கொண்டு செல்ல வேண்டும்

எங்களுக்குள் பிரிவினையற்ற நிலை இல்லாது தமிழ் தேசியத்துக்கு அந்த பலத்தை கொண்டு செல்ல வேண்டும். பிரிவினைகள் மக்களுக்கு கோபத்தை உண்டுபண்ணும் இதனால் இருக்கின்ற 10 பிரநிதித்துவம் ஐந்தாக குறையலாம் இந்த கூட்டு தேர்தலுக்கான கூட்டாகவன்றி மக்கள் பிரச்சினைகளை வெளிக்கொணரவும் போராட்டங்களை முன்னெடுக்கவும் ஆலமரமாக இருக்க வேண்டும்.

 தமிழ் மக்களுக்கு  சுதந்திரம் கிடைக்கவில்லை

திருகோணமலை மாவட்ட தமிழரசு கட்சியின் முடிவால் கிளிநொச்சி மாவட்ட கட்சி கிளையும் இதே முடிவெடுத்துள்ளது என்றார்.

 இதன் போது உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன், தமிழ் கட்சிகள் சிறு சிறு கட்சிகளாக இருக்காமல் அனைவரும் ஒன்றிணைந்து தமிழ் தேசிய கூட்டமைப்பாக பயணித்து இழந்த உரிமைகளை மீளப் பெறுவோம் .1948ல் இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்தது ஆனால் தமிழ் மக்களுக்கு கிடைக்கவில்லை என்றார்.

NO COMMENTS

Exit mobile version