Home முக்கியச் செய்திகள் காசா போர் நிறுத்தம் குறித்து ட்ரம்பின் அதிரடி அறிவிப்பு

காசா போர் நிறுத்தம் குறித்து ட்ரம்பின் அதிரடி அறிவிப்பு

0

காசா (Gaza) போர் நிறுத்தம், அடுத்த வாரத்திற்குள் எட்டப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) அறிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதன்படி, காசா மோதலில் ஒரு வாரத்திற்குள் போர் நிறுத்தம் எட்டப்படும் என்று தான் நம்புவதாக ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

விரோதப் போக்கை 

இந்தநிலையில், காங்கோ – ருவாண்டா ஒப்பந்தத்தைக் கொண்டாடும் ஓவல் அலுவலக நிகழ்வில் போர்நிறுத்தம் நெருங்கிவிட்டது என்று நம்புவதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான விரோதப் போக்கை முடிவுக்குக் கொண்டுவர முயற்சிப்பதில் ஈடுபட்டுள்ள சிலருடன் தான் இப்போதுதான் பேசி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version