Home உலகம் மோடியை சரமாரியாக புகழ்ந்து தள்ளிய ட்ரம்ப்

மோடியை சரமாரியாக புகழ்ந்து தள்ளிய ட்ரம்ப்

0

இந்திய (India) பிரதமர் நரேந்திர மோடியின் (Narendra Modi) அரசியல் வாழ்க்கையை அழிக்க விரும்பவில்லை என அமெரிக்க (America) ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) தெரிவித்துள்ளார்.

ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த ட்ரம்ப், மோடி சிறந்த மனிதர், அவர் என்னை நேசிப்பதாக செர்ஜியோ தெரிவித்தார்.

அரசியல் வாழ்க்கை

நேசிக்கின்றார் என்ற வார்த்தையை தவறாக எடுத்துக் கொள்ளாதீர்கள், அவருடைய அரசியல் வாழ்க்கையை நான் அழிக்க விரும்பவில்லை.

நான் இந்தியாவை பல ஆண்டுகளாகப் பார்த்து வருகிறேன், ஒரு அற்புதமான நாடு.

ஒவ்வொரு ஆண்டும் புதிய தலைவர்கள் வருவார்கள், சிலர் சில மாதங்களே இருப்பார்கள் ஆனால், எனது நண்பர் மோடி நீண்ட காலமாக பிரதமராக இருக்கின்றார்” என அவர் தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version