Home உலகம் வரி விதிப்பை பயன்படுத்தி மீண்டும் பிரதமராக ட்ரூடோ திட்டம்: ட்ரம்ப் குற்றச்சாட்டு

வரி விதிப்பை பயன்படுத்தி மீண்டும் பிரதமராக ட்ரூடோ திட்டம்: ட்ரம்ப் குற்றச்சாட்டு

0

ஜஸ்டின் ட்ரூடோ (Justin Trudeau), அமெரிக்காவுடனான வரி விதிப்பு பிரச்சினையை பயன்படுத்தி மீண்டும் கனடா பிரதமராக முயற்சிக்கிறார் என அமெரிக்க (United States) ஜனாதிபதி ட்ரம்ப் (Donald Trump) குற்றம் சாட்டியுள்ளார்.

கனடா மீது அமெரிக்கா வரி விதிக்க இருப்பதாக கூறியுள்ள விடயம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொறு வடிவம் எடுக்கிறது.

வரி விதிப்பு பிரச்சினை

ட்ரம்ப் வரி விதிக்கிறார், பிறகு தள்ளி வைக்கிறார், இப்படியே அந்த பிரச்சினை இழுத்துக்கொண்டே செல்கிறது. 

இந்நிலையில், ட்ரம்ப் தனது சமூக ஊடகப்பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு ஒன்றில், ட்ரூடோ கனடாவுக்காக இவ்வளவு மோசமான வேலையைச் செய்துள்ள நிலையிலும், அமெரிக்காவுடனான வரி பிரச்சினையை பயன்படுத்திக்கொள்ள நினைக்கிறார் என்று நினைக்கிறேன். 

வரி பிரச்சினைக்கு அவரே முக்கிய காரணமாக இருந்தும், அந்த பிரச்சினையைப் பயன்படுத்திக்கொண்டு மீண்டும் பிரதமராக முயற்சிக்கிறார் ட்ரூடோ, வேடிக்கையாக இருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார் ட்ரம்ப். 

NO COMMENTS

Exit mobile version