Home உலகம் நெதன்யாகுவின் மெய்பாதுகாவலரான ட்ரம்ப்: மூக்கை நுழைக்கும் புதிய விவகாரம்!

நெதன்யாகுவின் மெய்பாதுகாவலரான ட்ரம்ப்: மூக்கை நுழைக்கும் புதிய விவகாரம்!

0

லஞ்சம், மோசடி மற்றும் நம்பிக்கை மோசடி குற்றச்சாட்டுகளின் பேரில் கடந்த 2019ம் ஆண்டு முதல் வழக்குகளுக்கு முகம்கொடுத்து வரும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு, மன்னிப்பு வழங்க வேண்டும் அல்லது வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வலியுறுத்தியுள்ளார்.

இதைத் தொடர்ந்து, சர்வதேச அளவில் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

ஜனநாயக அமைப்புகள், சட்ட நிபுணர்கள் மற்றும் அரசியல் விமர்சகர்கள், அமெரிக்கத் தலைவர் ஒருவர் நேரடியாக மற்றொரு நாட்டின் நீதிமன்ற நடவடிக்கையில் தலையீடு செய்வது மிகவும் கண்டனத்திற்குரிய விடயம் என தெரிவித்துள்ளனர்.

ட்ரம்பின் சர்ச்சைகுரிய பதிவு

2019ம் ஆண்டு, நெதன்யாகுவின் மீது லஞ்சம், ஊழல், அதிகாரத்தை தவறாக பயன்படுத்தல் உள்ளிட்ட மூன்று முக்கிய வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

நெதன்யாகு குற்றங்களை மறுத்தபோதிலும், வழக்குகள் 2020ம் ஆண்டு தொடங்கின. இப்போது டெல் அவீவ் நீதிமன்றத்தில், கடந்த ஜூன் 3 ஆம் திகதி முதல் குறுக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.இது சுமார் ஒரு ஆண்டுக்காலம் நீடிக்கக்கூடியதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ட்ரம்ப தனது ட்ரூத் சோஷியல் கணக்கில், “இஸ்ரேலுக்காக மிக அதிகம் செய்த ஒரு ஹீரோவாக நெதன்யாகு இருக்கிறார். அவர் மீது வழக்குகள் தொடர வேண்டிய அவசியமில்லை. மன்னிப்பு உடனடியாக வழங்கப்பட வேண்டும்.” என பதிவிட்டுள்ளார்.

அத்தோடு, “இஸ்ரேலை காப்பாற்றியது அமெரிக்காதான், இப்போது நெதன்யாகுவை காப்பாற்றும் பொறுப்பும் அமெரிக்காதான்,” என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.

நீதிமன்ற சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல்

இவ்வாறானதொரு பின்னணியில், நெதன்யாகுவுக்கு மன்னிப்பு வழங்கும் அதிகாரம் இஸ்ரேல் ஜனாதிபதி ஐசக் ஹெர்சோக்கிடம் உள்ளது.

ஆனால், தற்போது எந்தவிதமான மன்னிப்பு கோரிக்கையும் பரிசீலனையில் இல்லை என்றும், இதுபோன்ற முன்மொழிவும் அரசிடம் வரவில்லை என்றும் இஸ்ரேலிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இதன்படி, ட்ரம்பின் பேச்சுகள் இஸ்ரேல் அரசியல் சாசனத்தின் நீதிமன்ற சுதந்திரத்திற்கே எதிரானவையாக காணப்படுவதாக சட்டவியலாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அத்துடன், ட்ரம்பின் இந்த செயற்பாடு, போலி நம்பிக்கையை உருவாக்கி, அரசியல் ஒப்பந்தங்கள் தனிநபர் நலனுக்காக முறைக்கேடாக செல்லும் அபாயம் உள்ளது என “Democratic Right” உள்ளிட்ட அமைப்புகள் எச்சரித்துள்ளன. 

NO COMMENTS

Exit mobile version