Home உலகம் வெனிசுலாவுக்கு போர் எச்சரிக்கை விடுத்த ட்ரம்ப்…! அதிகரிக்கும் பதட்டம்

வெனிசுலாவுக்கு போர் எச்சரிக்கை விடுத்த ட்ரம்ப்…! அதிகரிக்கும் பதட்டம்

0

வெனிசுலாவுடன் போா் ஏற்படுவதற்கான வாய்ப்பை மறுப்பதற்கில்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளாா்.

குறித்த விடயத்தை நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “வெனிசுலாவுடன் போா் நடத்துவது குறித்து தற்போதைக்கு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தவில்லை.

எண்ணெய்க் கப்பல்

இருந்தாலும் அதற்கான வாய்ப்பை மறுக்க மாட்டேன்.

வெனிசுலா மீது போா் தொடுப்பதும் தொடுக்காததும் அந்த நாட்டு அரசின் கைகளில்தான் உள்ளது.

அவா்கள் முட்டாள்தனமாக செயல்பட்டு எண்ணெய்க் கப்பல்களை இயக்கினால் அந்தக் கப்பல்களை அமெரிக்காவின் ஏதாவது ஒரு துறைமுகத்துக்கு திருப்ப வேண்டிய நிலை ஏற்படும்.

வெனிசூலா ஜனாதிபதி நிக்கோலஸ் மடூரோவை பதவியில் இருந்து அகற்றும் என் முடி குறித்து மாற்றுக் கேள்விக்கே இடம் இல்லை.

மற்றவா்களை விட இது அவருக்குத்தான் நன்கு தெரியும்” என அவர் தெரிவித்துள்ளார்.    

NO COMMENTS

Exit mobile version