தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் (Vijay) மற்றும் அவரது தொண்டர்கள் மீது கட்சியின் முன்னாள் உறுப்பினரான வைஷ்ணவி (Vaishnavi) எனும் பெண் காவல்துறையில் முறைப்பாடு அளித்துள்ளார்.
கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் நேற்றைய தினம் (21) அவர் தனது முறைப்பாட்டை அளித்து இருந்தார்.
குறித்த பெண், தமிழக வெற்றிக் கழகத்தில் இருந்து விலகி திமுகவில் அண்மையில் இணைந்திருந்தார்.
இதனால், சமூக வலைதளங்களில் தன்னைப் பற்றி அவதூறாகவும் மற்றும் கேலிசித்திரங்கள் மூலமாகவும் பதிவுகள் இடப்பட்டதாக குற்றம்சாட்டி அவர் தனது முறைப்பாட்டை முன்வைத்துள்ளார்.
இது தொடர்பில் அவர் ஊடகங்களுக்கு தெரிவித்த கருத்துக்கள் அடங்கிய காணொளி வருமாறு,
https://www.youtube.com/embed/WvrsfD4FhH8
