Home உலகம் பாகிஸ்தானில் எக்ஸ் தளத்துக்கு தற்காலிக தடை!

பாகிஸ்தானில் எக்ஸ் தளத்துக்கு தற்காலிக தடை!

0

பாகிஸ்தானில் எக்ஸ்(Twitter) தளத்துக்கு தற்காலிக தடை விதித்து அந்நாட்டு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் குறித்த முடிவானது தேசிய பாதுகாப்பு கருதி எடுக்கப்பட்ட முடிவென இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் அந்நாட்டு அரசு விளக்கம் அளித்துள்ளது.

முன்னாள் பிரதமர் இம்ரான் கான்(Imran Khan) கைது செய்யப்பட்ட சமயத்தில் எக்ஸ் தள சேவை பாகிஸ்தானில் முடக்கப்பட்டதை தொடர்ந்து பாகிஸ்தானில் எக்ஸ் தள சேவையில் பல்வேறு தடங்கல் இருந்து வந்தன.

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! பலர் காயம்

வழக்கு 

இது தொடர்பாக வழக்கு தொடுக்கப்பட்ட நிலையில் வழக்கின் விசாரணையின் போது எக்ஸ் தளத்துக்கு தடை விதித்திருப்பதை இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் பாகிஸ்தான் அரசு ஒப்புக்கொண்டுள்ளது.

விசாரணைகளின் போது இது தொடர்பாக பாகிஸ்தான் அரசு வழக்கறிஞர் தெரிவிக்கையில், “பாகிஸ்தான் அரசின் சட்டபூர்வ உத்தரவுகளை எக்ஸ் நிறுவனம் கடைப்பிடிக்கத் தவறியது.

இந்தோனேசியாவில் வெடித்த எரிமலை: மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள சுனாமி எச்சரிக்கை

எக்ஸ் தளம்

அத்தோடு எக்ஸ் தளத்தை தவறாகப் பயன்படுத்துவது தொடர்பான கவலைகள் அரசு தரப்பில் தெரிவிக்கப்படுவதுடன் அதனை நிறுவனம் சரி செய்யவில்லை.

எனவேதான் தடை விதிக்கப்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டது அத்தோடு எக்ஸ் நிறுவனம் முக்கியமான பிரச்சினைகளைத் தீர்ப்பதில் பாகிஸ்தான் அரசு அதிகாரிகளுடன் ஒத்துழைக்க தயக்கம் காட்டியது” என அவர் தெரவித்துள்ளார்.

மேலும் இதன்பின் உத்தரவு பிறப்பித்த நீதிமன்றம் ஒரு வாரத்துக்குள் எக்ஸ் தள முடக்கத்தை பாகிஸ்தான் அரசு கைவிட வேண்டுமென கூறி அவகாசம் அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கனடா விமானநிலையத்தில் 100 கோடி திருட்டு: பல மாதங்களுக்கு பின் சிக்கிய கொள்ளைக் கும்பல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!

NO COMMENTS

Exit mobile version