Home முக்கியச் செய்திகள் விடுமுறையில் சென்ற சிறிலங்கா இராணுவ சிப்பாய்களின் செயல் : சுற்றிவளைத்து பிடித்த காவல்துறை

விடுமுறையில் சென்ற சிறிலங்கா இராணுவ சிப்பாய்களின் செயல் : சுற்றிவளைத்து பிடித்த காவல்துறை

0

அமுனு கோல் பகுதியில் கஞ்சாவுடன் இரு இராணுவ வீரர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக நன்னேரிய காவல்துறையினர் தெரிவித்தனர்.

இதன்படி, நவகத்தகம, ரம்பகநாயக்கம பிரதேசத்தில் வசிக்கும் 23 மற்றும் 21 வயதுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களில் ஒருவர் சாலியபுர இராணுவ முகாமைச் சேர்ந்த சிப்பாய் எனவும் மற்றைய சந்தேக நபர் வெள்ளங்கும்புர இராணுவ முகாமைச் சேர்ந்த சிப்பாய் எனவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

 விடுமுறையில் சென்றவேளை கஞ்சா 

குறித்த சந்தேகநபர்கள் இருவரும் வேலையிலிருந்து விடுமுறையில் சென்றிருந்த வேளையில் கஞ்சா வைத்திருந்த போதே கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

நன்னேரிய காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

NO COMMENTS

Exit mobile version