Home உலகம் இம்ரான் கானை விடுதலை செய்யக்கோரி பாகிஸ்தானில் பாரிய பேரணி

இம்ரான் கானை விடுதலை செய்யக்கோரி பாகிஸ்தானில் பாரிய பேரணி

0

பல்வேறு குற்றச்சாட்டுக்களுக்காக தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் (Pakistan) முன்னாள் பிரதமர் இம்ரான் கானை (Imran Khan) விடுதலை செய்யக்கோரி பாகிஸ்தான் தெக்ரிக்-இ-இன்சப் கட்சியினர் பேரணியொன்றை நடத்தியுள்ளனர்.

குறித்த பேரணியானது நேற்று (08.09.2024) தலைநகர் இஸ்லாமாபாத்தின் சங்ஜனி மாட்டுச்சந்தை பகுதியில் நடைபெற்றுள்ளது.

வன்முறை

இம்ரான் கான் மீது அரசின் இரகசியங்களை கசியவிட்டதாகவும், பிரதமர் பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து வன்முறையை தூண்டியதாகவும், தேர்தல் ஆணையத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டதாகவும் பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்த வழக்குகளில் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பீபி கைது செய்யப்பட்டு ராவல்பிண்டியில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இம்ரான் கானை விடுதலை செய்யக்கோரி அவரது கட்சி ஆதரவாளர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version