தேர்தல் விதிமுறைகளை மீறி அரசியல் கட்சி ஒன்றின் சுவரொட்டிகளை சட்டவிரோதமான முறையில் இன்று (14) அதிகாலை ஒட்டிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காலி(galle) காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
காலி கந்தவத்தை பகுதியில் சுவரொட்டிகளை ஒட்டிய வேளையில் கண்டவத்தை பிரதேசத்தை சேர்ந்த 66 வயது மற்றும் 55 வயதுடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சுவரொட்டிகளை ஒட்டுவது சட்டவிரோதமானது
நடமாடும் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் அவர்களைக் கைது செய்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
தேர்தல் காலத்தில் சுவரொட்டிகளை ஒட்டுவது சட்டவிரோதமானது என்பதுவும் அதனை காவல்துறையினரும், இராணுவத்தினரும் அகற்றி வருவதுவும் குறிப்பிடத்தக்கது.