கிளிநொச்சியில் 55 கிலோ கேரள கஞ்சாவை வைத்திருந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கை, இராணுவ புலனாய்வுத் தகவலின் அடிப்படையில் நேற்றையதினம்(14.10.2025) இடம்பெற்றுள்ளது.
போதைப்பொருளை, பூநகரி கௌதாரிமுனை சந்திப்பிலிருந்து
யாழ்ப்பாணம் நோக்கி கொண்டு சென்ற போதே குறித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலதிக விசாரணை
இந்நிலையில், சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
