Home முக்கியச் செய்திகள் தமிழர் தலைநகரில் சொகுசு காரில் போதைப்பொருள் கடத்தல் :இருவர் கைது

தமிழர் தலைநகரில் சொகுசு காரில் போதைப்பொருள் கடத்தல் :இருவர் கைது

0

சொகுசு காரில் போதைப்பொருள் கடத்திய இருவரை காவல்துறை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.

விசேட அதிரடிப்படையின் கொனஹேன முகாம் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் திருகோணமலை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நீண்டகாலமாக போதைப்பொருள் கடத்தலில்

இவர்கள் நீண்டகாலமாக போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வருவது தெரியவந்துள்ளது.

அவர்களிடம் 10 கிராம் 160 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் காணப்பட்டதுடன் சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக திருகோணமலை காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

Source: https://ibctamil.com/article/two-people-were-arrested-for-drug-trafficking-1718514136?itm_source=parsely-popular

NO COMMENTS

Exit mobile version