சீரற்ற காலநிலை காரணமாக யாழ்ப்பாணம் கல்வி வலயத்தில் இரண்டு பாடசாலைகளை
தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் ஒஸ்மானியா கல்லூரி மற்றும் யாழ்ப்பாணம்
கதீஜா மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளேயே நாளையும் (27.11.2024) நாளை மறுதினமும் (28.11.2024)
தற்காலிகமாக மூடுமாறு யாழ். மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபன் தெரிவித்துள்ளார்.
சீரற்ற காலநிலை நிலவி வருவதால் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின்
பாதுகாப்பு கருதி இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
சீரற்ற காலநிலை
நாட்டில் தற்போது நிலவிவரும் சீரற்ற காலநிலை காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.