Home இலங்கை இலங்கை குறித்து கவலை வெளியிட்ட ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை

இலங்கை குறித்து கவலை வெளியிட்ட ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை

0

Courtesy: Sivaa Mayuri

இலங்கையில் சிக்கன நடவடிக்கைகளின் தாக்கம் குறித்து ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் (Volker Türk) கவலை வெளியிட்டுள்ளார்.

குறித்த விடயத்தினை அவர் நேற்று(18.06.2024) இடம்பெற்ற மனித உரிமைகள் பேரவையின் 56 ஆவது அமர்வில் உலகளாவிய ரீதியிலான புதுப்பிப்புகளை வழங்கி உரையாற்றும் போது தெரிவித்துள்ளார்.

சிக்கன நடவடிக்கைகள்

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையின் பேரண்ட பொருளாதார நிலைமை மேம்பட்டுள்ள நிலையில், பொருளாதார நெருக்கடியின் தாக்கங்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய சிக்கன நடவடிக்கைகள், ஏழ்மையான மற்றும் ஏற்கனவே ஓரங்கட்டப்பட்ட குழுக்களை அதிகம் பாதிக்கின்றன.

2021 மற்றும் 2023க்கு இடையில், வறுமை விகிதம் 13.1 முதல் 25.9 சதவிகிதம் வரை இரட்டிப்பாகியுள்ளதாகவும், அடுத்த சில ஆண்டுகளில்  இந்த நிலை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒக்ஸ்பாம் அமைப்பின் கூற்றுப்படி, இந்த தசாப்தத்தின் தொடக்கத்தில் இருந்து உலகின் ஐந்து பணக்கார பில்லியனர்களின் செல்வம் இரட்டிப்பாகியுள்ளது.

அதே நேரத்தில் மனிதகுலத்தில் 60 சதவீதம் பேர் ஏழைகளாக மாற்றப்பட்டுள்ளனர்.

2019 இல் இருந்ததை விட 4.8 பில்லியன் மக்கள் ஏழ்மையில் உள்ளனர் என்றும் உலகளவில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையிலான செல்வ இடைவெளி 100 டிரில்லியன் அமெரிக்க டொலர்களாக விரிவடைந்துள்ளது என சுட்டிக்காட்டியுள்ளார். 

NO COMMENTS

Exit mobile version