Home இலங்கை அரசியல் விகாரைகளின் கீழ் புதைக்கப்பட்டுள்ள தமிழர்களின் உடலங்கள்!

விகாரைகளின் கீழ் புதைக்கப்பட்டுள்ள தமிழர்களின் உடலங்கள்!

0

விகாரைகளுக்கு கீழ் மனித புதைக்குழிகள் இருப்பதற்கு வாய்ப்புக்கள் நூறு வீதம் உள்ளன என்று மனித உரிமை செயற்பாட்டாளர் சண் மாஸ்டர் தெரிவித்தார்.

லங்காசிறிக்கு வழங்கிய பிரத்தியேக நேர்காணலின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,இன்றைய கால கட்டத்தில் தமிழர் தாயகம், நெல் விளையும் பூமி என்பதை கடந்து மனித எலும்பு கூடுகளும், மனித உடலங்கள் மற்றும் அவயங்கள் கிடைக்கும் மயானமாக மாறியுள்ளது.

 

விகாரைகளுக்கு கீழ் மனித புதைக்குழிகள் இருப்பதற்கு வாய்ப்புக்கள் நூறு வீதம் உள்ளன.

இதேவேளை விகாரைகளுக்கு கீழ் தமிழர்களின் உடலங்கள் புதைக்கப்பட்டுள்ளது என்ற அச்சத்தில் நியாயம் உள்ளது.

ஏன் இலங்கை இராணுவம் விகாரைகளை தேர்ந்தெடுத்திருக்கலாம் என்றால், முள்ளிவாய்க்கால் போருக்கு பின்னர் புதிதாக முளைத்துள்ள விகாரைகள் எல்லாம் கட்டப்பட்ட இடங்களெல்லாம் இராணுவ முகாம்கள் இருந்த இடங்களாகவே காணப்படுகின்றன என கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவர் கூறியுள்ள விரிவான விளக்கங்களை கீழுள்ள காணொளியில் காணலாம்….     

 

NO COMMENTS

Exit mobile version