Home இலங்கை இலங்கை போர்க்குற்றவாளிகள் மீதான தடைகள்: பிரித்தானியா வழங்கிய உறுதிமொழி

இலங்கை போர்க்குற்றவாளிகள் மீதான தடைகள்: பிரித்தானியா வழங்கிய உறுதிமொழி

0

இலங்கை போர்க்குற்றவாளிகள் மீதான பிரித்தானியாவின் தடைகள் தொடரும் என அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் யெவட் கூப்பர் உறுதியளித்துள்ளார்.

வெளியுறவு அமைச்சர் யெவட் கூப்பர் (Yvette Cooper) தலைமையில் இந்தவாரம் பிரித்தானிய நாடாளுமன்றத்தில் வெளியுறவு தெரிவுக் குழுக்கூட்டம் இடம்பெற்றது.

இந்தக் கூட்டத்தின் போது இலங்கை தொடர்பான பல்வேறு விடயங்கள் பேசப்பட்டுள்ளன.

கேள்வியெழுப்பிய உமாகுமரன்

அந்த வகையில் இலங்கையில் மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்களில் ஈடுபட்ட குற்றவாளிகள் மீது பிரித்தானிய அரசாங்கம் எடுக்கவுள்ள நடவடிக்கை குறித்து தொழிற்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான உமாகுமரன் (Uma Kumaran) வினவியபோதே அவர் இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளார்.

பிரித்தானியா அடுத்த வருடத்தின் முற்பகுதியில் இலங்கையை சேர்ந்த சிலருக்கு தடை விதிக்கவுள்ளதாக கூறப்படும் நிலையில் வெளியுறவு அமைச்சர் யெவட் கூப்பரின் இந்தக் கருத்து வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version