Home முக்கியச் செய்திகள் அமெரிக்க பாணியில் ரஷ்யாவில் நடத்தப்பட்ட தாக்குதல்

அமெரிக்க பாணியில் ரஷ்யாவில் நடத்தப்பட்ட தாக்குதல்

0

கடந்த 2001 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 11 ஆம் திகதி அமெரிக்காவின்(us) உலக வர்த்தக மைய கட்டடத்தின் மீது இரண்டு விமானங்களை மோதச் செய்து நடத்தப்பட்ட தாக்குதல்கள் போல ரஷ்யாவில்(russia) ஆளில்லா விமானங்கள் மூலம் இன்று(21) அதிகாலை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது பலரது கவனத்தைம் ஈர்த்துள்ளது.

 ரஷ்யாவின் கசான் நகரத்தில் உள்ள உயர்ந்த கட்டடமே இவ்வாறு ஆளில்லா விமானங்களால் தாக்கப்பட்டுள்ளது.

இதனால் கசான் நகரைச் சுற்றியுள்ள பல விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.

குடியிருப்பு வளாகங்கள் மீது தாக்குதல்

ரஷ்ய தலைநகர் மொஸ்கோவில் இருந்து சுமார் 800 கிமீ தொலைவில் உள்ள கசானில் உள்ள பல குடியிருப்பு வளாகங்கள் ஆளில்லா விமானங்களால் தாக்கப்பட்டதாக ரஷ்ய அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.

இன்று (21) காலை மூன்று ஆளில்லா விமானங்கள் மூலம் நகரம் தாக்கப்பட்டதாக அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

மக்களை வெளியேற்றும் அதிகாரிகள்

கசானில் அதிகாரிகள் தாக்கப்பட்ட கட்டிடங்களில் இருந்து மக்களை வெளியேற்றி வருகின்றனர்.

ட்ரோன் தாக்குதல்கள் உக்ரைனால்(ukraine) நடத்தப்பட்டதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் கூறியது, ஆனால் உக்ரைன் அதிகாரிகள் இது குறித்து இதுவரை எந்த அறிக்கையும் வெளியிடவில்லை.

நகரின் குடியிருப்புப் பகுதிகளை ட்ரோன்கள் குறிவைத்ததாக கசான் மேயர் அலுவலகம் தெரிவித்தது.

https://www.youtube.com/embed/a_LKGF7fh70

NO COMMENTS

Exit mobile version