Home உலகம் ஜேர்மனிக்கு நன்றி தெரிவித்துள்ள உக்ரைன் : ஜெலென்ஸ்கியின் முக்கிய அறிவிப்பு

ஜேர்மனிக்கு நன்றி தெரிவித்துள்ள உக்ரைன் : ஜெலென்ஸ்கியின் முக்கிய அறிவிப்பு

0

உக்ரைன் (Ukraine) ஜனாதிபதி ஜெலென்ஸ்கி (Volodymyr Zelenskyy), ஜேர்மனிக்கு (Germany) நன்றி தெரிவித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உக்ரைனுக்கு கூடுதலாக மூன்று பில்லியன் யூரோக்கள் வழங்க ஜேர்மனி முடிவு செய்துள்ள அவர் இந்த செய்தியை வெளியிட்டுள்ளார்.

2025 ஆம் ஆண்டு பட்ஜெட்டில், உக்ரைனுக்கு நான்கு பில்லியன் யூரோக்கள் வழங்க ஜேர்மனி முடிவு செய்திருந்தது.

ஜேர்மனி முடிவு

இந்தநிலையில், இந்த ஆண்டில் மேலும் மூன்று பில்லியன் யூரோக்களும், 2026 முதல் 2029 வரையிலான காலகட்டத்தில் எட்டு பில்லியன் யூரோக்களும் உக்ரைனுக்கு வழங்க தற்போது ஜேர்மன் நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கமிட்டி முடிவு செய்துள்ளது.

இதனடிப்படையில், உக்ரைனுக்கு நிதி உதவி வழங்க ஜேர்மனி முடிவு செய்துள்ளதை ஜெலென்ஸ்கி வரவேற்பதாக தெரிவித்துள்ளார்.

நிதி உதவி 

இது தொடர்பில் அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

குறித்த பதிவில், நிதி உதவி வழங்கும் ஜேர்மனியின் முடிவுக்காக ஜேர்மன் மக்களுக்கும், அரசுக்கும், தற்போதைய சேன்ஸலரான ஓலாஃப் ஷோல்ஸுக்கும் மற்றும் அடுத்த சேன்சலராக பதவியேற்க இருக்கும் பிரெட்ரிக் மெர்ஸுக்கும் தான் மனமார நன்றி தெரிவித்துக்கொள்வதாக அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version