Home முக்கியச் செய்திகள் தேசபந்து தென்னகோனை கொலை செய்ய துடிக்கும் பாதாள உலக குழு

தேசபந்து தென்னகோனை கொலை செய்ய துடிக்கும் பாதாள உலக குழு

0

வெளிநாட்டில் தலைமறைவாக உள்ள கஞ்சிபானி இம்ரான்,பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ள முன்னாள் காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோனை(deshabandu tennakoon) கொலை செய்ய தனது நெருங்கிய உதவியாளர்களுக்கு அறிவுறுத்தியதாக தகவல்கள் கிடைத்துள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஹோகந்தரவில் உள்ள தேசபந்து தென்னகோனின் வீட்டிற்குச் சென்று அவரைச் சந்தித்த இரண்டு காவல்துறை உயர் அதிகாரிகள் இதனைத் தெரிவித்தனர்.

உயிருக்கு அச்சுறுத்தல்

பதவி சார்ந்த கடமைகளை மேற்கொள்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள தேசபந்து தென்னகோனின் பாதுகாப்பு நீக்கப்பட்டதன் ஊடாக அவரது உயிருக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் தொடர்பான தகவல்கள் அடங்கிய புலனாய்வு அறிக்கை காவல்துறை தலைமையகத்திடம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கொலை மிரட்டல்கள்

‘யுக்திய’ உள்ளிட்ட நடவடிக்கைகள் மூலம் பாதாள உலகக் கும்பலையும் போதைப்பொருள் கடத்தலையும் ஒழிப்பதற்காக அவர் முன்னெடுத்த முயற்சிகள் காரணமாக, ஏனைய பாதாள உலகக் கும்பல் உறுப்பினர்களிடமிருந்தும் கொலை மிரட்டல்கள் வரக்கூடும் என தெரிவிக்கப்படுகிறது.  

NO COMMENTS

Exit mobile version