Home முக்கியச் செய்திகள் விசேட அதிரடிப் படையினர் வசம் சிக்கிய லொகு பெட்டியின் சகா!

விசேட அதிரடிப் படையினர் வசம் சிக்கிய லொகு பெட்டியின் சகா!

0

அம்பலங்கொடையில் நடந்த சிறப்பு நடவடிக்கையின் போது, ​​பிரபல பாதாள உலக தலைவரான லொக்கு பெட்டியின் நெருங்கிய கூட்டாளியான சுஜீவ ருவன் குமார கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பகுதியில் உள்ள ஒரு வழிப்பாட்டு தலத்தில் பூசாரியாக செயற்பட்டு வந்த நிலையில் சந்தேகநபர் காவல்துறை விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

போதைப்பொருள் கடத்தல் மூலம் சம்பாதித்ததாகக் கூறப்படும் ரூ. 336.6 மில்லியன், லொகு பெட்டியின் வலையமைப்பைச் சேர்ந்த 36 உறுப்பினர்களால் சந்தேக நபரின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சட்டவிரோத நடவடிக்கைகள்

அத்துடன், லொகு பெட்டியின் அறிவுறுத்தலின் பேரில், சட்டவிரோத நடவடிக்கைகளுக்காக இந்த நிதி மூன்று நபர்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், தற்போது பூஸ்ஸ அதியுயர் பாதுகாப்பு சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள லொக்கு பெட்டி, சிறையில் இருந்து கொண்டே குற்றச் செயல்களைத் திட்டமிட்டதற்காக விசாரணை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், சமீபத்திய சோதனையின் போது அவர் வசம் இருந்த தொலைப்பேசியை அவரே அழித்துள்ளதாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version