Home இலங்கை ஜப்பான் அரசாங்கம் இலங்கைக்கு வழங்கிய மற்றுமொரு உதவி!

ஜப்பான் அரசாங்கம் இலங்கைக்கு வழங்கிய மற்றுமொரு உதவி!

0

யுனிசெப் (UNICEF) நிறுவனமானது ஜப்பான் (Jappan) அரசாங்கத்தின் நிதியுதவியுடன் சுகாதார அமைச்சிற்கு ஒன்பது குளிரூட்டப்பட்ட ட்ரக் வண்டிகளை கையளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சுகாதார அமைச்சகத்தில் இன்று (22) நடைபெற்ற நிகழ்வில் சுகாதார அமைச்சர் வைத்தியர் ரமேஷ் பதிரனவிடம் (Dr. Ramesh Pathirana) அந்த ட்ரக் வண்டிகள் கையளிக்கப்பட்டுள்ளன.

இலங்கை முழுவதிலும் சிறுவர்களுக்கான தடுப்பூசி வழங்கல் முறைமையை மேம்படுத்துவதனை நோக்கமாக கொண்டு இந்த வண்டிகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குளிரூட்டப்பட்ட அறைகள்

ஜப்பான் அரசாங்கம் 2021ஆம் ஆண்டிலிருந்து தடுப்பூசிகளை பாதுகாப்பான வெப்பநிலையில் களஞ்சியப்படுத்துவதற்காக பெரிய நடமாடும் குளிரூட்டப்பட்ட அறைகள், எடுத்துச் செல்லத்தக்க தடுப்பூசி கொள்கலன்கள் மற்றும் வெப்பநிலைக் கண்காணிப்பு மானிகள் போன்ற குளிர்ச் சங்கிலி உபகரணங்களை வழங்கி வந்துள்ளது.

அதன் தொடர்சியாகவே இந்த குளிரூட்டப்பட்ட ட்ரக் வண்டிகள் கையளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

சுகாதார முறைமை

இதன்போது உரையாற்றிய வைத்தியர் ரமேஷ் பதிரன, இலங்கையின் சுகாதார முறைமையின் மிகவும் முக்கிய தூண்களில் ஒன்றான நிர்ப்பீடனமாக்கல் செயற்றிட்டத்தினை மேலும் பலப்படுத்துவதற்காக ஜப்பான் அரசாங்கம் மற்றும் யுனிசெப் நிறுவனம் இணைந்து வழங்கும் இந்த ஒத்துழைப்பினை மனப்பூர்வமாக வரவேற்பதாகவும் இந்த வண்டிகள் தடுப்பூசிகளை பாதுகாப்பாக உரிய நேரத்திற்கு கொண்டு செல்வதற்கு சுகாதார அமைச்சிற்கு துணை நிற்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இலங்கைக்கான ஜப்பான் நாட்டின் தூதுவர் மிசுகோஷி ஹிடேகி (Mitsukoshi Hideki) மற்றும் யுனிசெப் நிறுவனத்தின் இலங்கைக்கான (Sri Lanka) செயல்படும் பிரதிநிதி பெகோனா அரேலானோ (Pegona Aralona) ஆகியோர் இந்த நிகழ்வில் பங்கேற்று தங்களது கருத்துக்களை தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version