Home உலகம் இலங்கைக்கு உதவிக்கரம் நீட்டும் அமெரிக்கா: 2 மில்லியன் அமெரிக்க டொலர் நன்கொடை!

இலங்கைக்கு உதவிக்கரம் நீட்டும் அமெரிக்கா: 2 மில்லியன் அமெரிக்க டொலர் நன்கொடை!

0

நாட்டில் ஏற்பட்டுள்ள கடுமையான வெள்ளம் மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்க அமெரிக்கா முன்வந்துள்ளது.

அதன்படி, இலங்கையின் நிவாரணப் பணிகளுக்கு உதவுவதற்காக அமெரிக்கா 2 மில்லியன் அமெரிக்க டொலர்களை உடனடி உதவியாக அறிவித்துள்ளது.

இந்த கடினமான நாட்களில் அமெரிக்கா இலங்கையுடன் ஒற்றுமையாக நிற்கும் எனவும் அமெரிக்க தூதர் ஜூலி சுங் தெரிவித்தார்.

அமெரிக்கா ஆதரவு 

பேரிடரால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அமெரிக்கா தொடர்ந்து ஆதரவளிக்கும் எனவும் அமெரிக்க தூதர் ஜூலி சுங் தெரிவித்தார்.

இதேவேளை, நாட்டில் ஏற்பட்டுள்ள குறித்த அசாதாரண நிலைமையைக் கருத்தில் கொண்டு இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளும் நிவாரண உதவிகளை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version